/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
'கெய்ல்' நிறுவனத்தின் 'டெக்னிகல்' வாய்ப்பு
/
'கெய்ல்' நிறுவனத்தின் 'டெக்னிகல்' வாய்ப்பு
PUBLISHED ON : ஆக 22, 2017

கெய்ல் இந்தியா லிமிடெட் என்பது இயற்கை எரிவாயு சம்பந்தமான இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். இயற்கை எரிவாயுவை கண்டறிதல், உற்பத்தி செய்தல், பண்படுத்துதல், மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், வணிகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம் : எலக்ட்ரிக்கல் போர்மேனில் 40, இன்ஸ்ட்ரூமென்டேஷன் போர்மேனில் 35, ஜூனியர் கெமிஸ்டில் 12, அபீசியல் லாங்குவேஜ் ஜூனியர் சூப்பரின்டென்டண்டில் 5, ஸ்டோர்ஸ் அண்டு பர்சேஸ் அசிஸ்டென்டில் 15, அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்டில் 24, மார்க்கெடிங் அசிஸ்டென்டில் 20ம் சேர்த்து மொத்தம் 151 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது : முதல் நான்கு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், அடுத்த மூன்று பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : போர்மேன் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர் கெமிஸ்ட் பதவிக்கு எம்.எஸ்.சி., கெமிஸ்ட்ரி படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். அபீசியல் லாங்குவேஜ் பிரிவுக்கு இந்தியில் பட்டப் படிப்பு தேவைப்படும். ஸ்டோர்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க பட்டப் படிப்பும், அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.காம்., படிப்பும், மார்க்கெட்டிங் பிரிவுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் தகுதியும் தேவைப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : கெய்ல் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.50/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : கெய்ல் நிறுவனத்தின் காலியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 2017 செப்., 15.
விபரங்களுக்கு : www.gailonline.com/final_site/CR-ApplyingGail.html>

