PUBLISHED ON : டிச 12, 2023

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பி.இ.எம்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: துணை பொது மேலாளர் (எச்.ஆர்.,) 1, உதவி மேலாளர் 1, அட்மின் ஆபீசர் 30 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அட்மின் ஆபிசர் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 27.12.2023 அடிப்படையில் எச்.ஆர்., 45, உதவி மேலாளர் 30, அட்மின் ஆபீசர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Manager (HR), Recruitment Cell, BEML Soudha, No 23/1, 4th Main, S R Nagar, Bangalore - 560027.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பிக்க 27.12.2023, விண்ணப்பங்கள் சென்று சேர 3.1.2024
விபரங்களுக்கு: bemlindia.in
