PUBLISHED ON : பிப் 14, 2017
தூத்துக்குடியை மையமாக வைத்து நாடார் பேங்க் என்ற பெயரில் நிறுவப்பட்ட வங்கிதான் பின் நாட்களில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி என்று பெயர் மாற்றம் பெற்றது. தற்சமயம் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள டி.எம்.பி., மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றிற்காக பெயர் பெற்றது. இந்த வங்கி தனியார் துறை சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாகும். இந்த வங்கியில் தற்சமயம் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மா நிலங்களில் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 31.10.2016 அடிப்படையில் பட்டதாரிகள் என்றால் 24க்கு உட்பட்டும், முது நிலைப் பட்டதாரிகள் என்றால் 26க்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-ஐ ஆன்லைன் முறையில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 22.02.2017
விபரங்களுக்கு: www.tmb.in