/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்திய கப்பல் படையில் டெக்னிகல் பணியிடங்கள்
/
இந்திய கப்பல் படையில் டெக்னிகல் பணியிடங்கள்
PUBLISHED ON : பிப் 14, 2017

நமது நாட்டின் கப்பல் படை இந்தியன் நேவி என்று அறியப்படுகிறது. தொழில் நுட்ப ரீதியாக சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள எக்சிக்யூடிவ் டெக்னிகல் பிராஞ்சஸ் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரிவுகள்: எக்சிகியூடிவ் ஜெனரல் சர்வீஸ் (ஜி.எஸ்.,) பிராஞ்ச், எக்சிகியூடிவ் ( ஜி.எஸ்., /ஹைட்ரோ கேடர்), இன்ஜினியரிங் பிராஞ்சில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கன்ட்ரோல் சிஸ்டம், பவர் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பதாரர்கள் 02.01.1993 முதல் 02.07.1998க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
உடல் தகுதி: குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரமும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண் பார்வையிலும் சில குறைந்த பட்ச தேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: சர்வீஸஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.,) மூலமாக தேர்ச்சி இருக்கும். தமிழகத்தில் கோவையிலும், பெங்களூரு, போபால், விசாகப்பட்டினம் ஆகிய மையங்களிலும் இத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 24.02.2017
விபரங்களுக்கு:www.nausena-bharti.nic.in/index.php

