sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள காலியிடங்கள்

/

டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள காலியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள காலியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள காலியிடங்கள்


PUBLISHED ON : பிப் 14, 2017

Google News

PUBLISHED ON : பிப் 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) தமிழகத்திலுள்ள அரசு காலியிடங்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருகிறது. தற்சமயம் இந்த அமைப்பின் சார்பாக ஹாஸ்டல் சூப்பரிண்டன்ட் கம் பிசிக்கல் டிரைனிங் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 01.07.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 08.02.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ இன் பிசிக்கல் எஜூகேசன் முடித்திருக்க வேண்டும். அல்லது பிசிக்கல் எஜூகேஷன் பிரிவில் டீச்சர் டிரைனிங் முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2விற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஓ.எம்.ஆர்., அடிப்படையிலான அப்ஜெக்டிவ் வகைத் தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு என்ற இரண்டு நிலைகளில் தேர்ச்சி இருக்கும். அப்ஜெக்டிவ் வகைத் தேர்வில் பிசிக்கல் எஜூகேஷன் பிரிவில் 300 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாளில் பொது அறிவு பிரிவில் 200 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்படும்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை மற்றும் மதுரையில் இத்தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 09.03.2017

விபரங்களுக்கு: www.tnpsc.gov.in






      Dinamalar
      Follow us