தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கார்ப்பரேஷன் வங்கி அதிகாரி பணிவாய்ப்பு

கார்ப்பரேஷன் வங்கி அதிகாரி பணிவாய்ப்பு

கார்ப்பரேஷன் வங்கி அதிகாரி பணிவாய்ப்பு


PUBLISHED ON : ஆக 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பிரசித்தி பெற்ற கார்ப்பரேஷன் வங்கி 1980ல்தான் தேசியமயமாக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்ட போது தனது பங்குளை சந்தையில் அறிமுகம் செய்த இரண்டாவது வங்கியாகும் இது. தற்போது இந்த வங்கிக்கு நாடு தழுவிய கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நவீனமாக்கப்பட்ட சேவைகள் என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்த வங்கியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: கார்ப்பரேஷன் வங்கியில் ஏ.எப்.ஓ., எனப்படும் அக்ரிகல்சர் பீல்டு ஆபிசர் பிரிவில் 175 காலி இடங்களும், பெர்சனல் ஆபிசர் பிரிவில் 10 காலி இடங்களும், ஜூனியர் எகனாமிஸ்ட் பிரிவில் ஒரு இடமும் இவை தவிர ஐ.டி., ஆபிசர் பிரிவில் உள்ள காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்: கார்ப்பரேஷன் வங்கியின் அக்ரி பீல்டு ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அக்ரி பீல்டு ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஹார்டிகல்சர், அக்ரிகல்சர் ஆகிய ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். பெர்சானல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப் படிப்பை முடித்துவிட்டு பெர்சனல் மேனேஜ்மெண்ட், எச்.ஆர்., சமூக சேவை, லேபர் வெல்பேர் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முது நிலை டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஐ.டி., ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எல்லா பதவிகளுக்குமே கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் கட்டாயம் தேவைப்படும். இவற்றுடன் கடந்த ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு நடத்திய அதிகாரிகளுக்கான தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்றவை: கார்ப்பரேஷன் வங்கியின் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க பிரிவுக்கு ஏற்றபடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை இணையதளத்திலிருந்து அறியவும். கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த வங்கியின் இணையதளத்திலிருந்து முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 23.08.2012

இணையதள முகவரி:

http://corpbank.com/uploadedfiles/custom/Corp&Specialist&officers&ad&Eng&for&web&020812.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us