PUBLISHED ON : ஆக 13, 2012

கேரள மாநிலத்தில் புதிய சாலைகளை உருவாக்குதல், பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் உள்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துதல், சாலைப் பாதுகாப்பு குறித்த பணிகளை மேம்படுத்துதல், தற்போது உபயோகத்திலுள்ள சாலைகளை பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்வதற்காக கேரள சாலை நிதி வாரியம் நிறுவப்பட்டது. அரசு நிறுவனங்களுக்கே உரிய மந்தமான செயல்பாடு இன்றி துடிப்புடன் செயல்படும் விதத்தில் இந்த வாரியத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் எக்ஸிக்யூடிவ் பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: கேரளா ரோடு பண்டு போர்டின் மேனேஜ்மென்ட் எக்ஸிக்யூடிவ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் எம்.பி.ஏ., படிப்பில் நிதித் துறையில் பினான்சியல் மேனேஜ்மென்ட் பிரிவில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையுடன் சார்ந்த புராஜக்ட் கான்சப்சுவலிசேஷன், புராஜக்ட் பார்முலேஷன், மற்றும் புராஜக்ட் ரிபோர்டுகளைத் தயாரித்தல் போன்ற பணிகளில் குறைந்த பட்சம் ஒரு வருட கால பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: கேரள சாலை நிதி வாரியத்தின் நிர்வாக அதிகாரி பதவிக்கு மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் உடையவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் மாதம் ரூ.25 ஆயிரம் நிகர ஊதியமாக ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 14.08.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மற்ற விபரங்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
Keral Road Fund Board,
TC 4/1654, Mayooram, Belhaven Gardens,
Kowdiar Post,
Thiruvananthapuram - 695003.
இணையதள முகவரி : www.krfb.org/content/careersList/
