PUBLISHED ON : டிச 10, 2012

கவுன்சில் பார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் எனப்படும் சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பு அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்தது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். இந்த அமைப்பில் உள்ள நிர்வாகப் பணி இடங்களை பொது எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படுவது வழக்கம். இந்த பொது எழுத்துத் தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம் பொது உதவியாளர் பதவிகள் 106ம், கணக்கியல் தொடர்பான உதவியாளர் பதவிகள் 24ம், ஸ்டோர்ஸ் அண்டு பர்சேசஸ் பிரிவிலான உதவியாளர் பதவிகள் 25ம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேவைகள்:
சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பு அறிவித்துள்ள மேற்கண்ட உதவியாளர் காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 31.12.2012 அடிப்படையில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொது போட்டித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்று இந்தப் பதவியை அடைய வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை உள்ளிட்ட நாட்டின் 10 மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மற்ற தகவல்கள்:
கவுன்சில் பார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ஸ் நிறுவனத்தின் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் பிரிவுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் மாதம் ரூ.9 ஆயிரத்து 300 முதல் ரூ.34 ஆயிரத்து 800
வரையிலான ஊதியம் பெற முடியும்.
விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை 31.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியலாம்.விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் :
31.12.2012இணையதள முகவரி:
