sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ஒளிபரப்பு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி பணி

/

ஒளிபரப்பு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி பணி

ஒளிபரப்பு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி பணி

ஒளிபரப்பு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி பணி


PUBLISHED ON : பிப் 21, 2017

Google News

PUBLISHED ON : பிப் 21, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராட்கேஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இன் இந்தியா லிமிடெட் எனப்படும் பி.இ.சி.ஐ.எல்., நிறுவனம் அரசுத்துறை சார்ந்த ஒரு மினிரத்னா நிறுவனம். இது 1995ல் நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்று இயங்கி வருவது சிறப்பு. ரேடியோ மற்றும் டெலிவிஷன், சாட்டிலைட் மற்றும் கேபிள் பிராட்கேஸ்டிங் உள்ளிட்ட முக்கியப் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் புது டில்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் நிரப்பப்படலாம் என்று தெரிகிறது.காலியிட விபரம் : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - ஆங்கிலத்தில் 98ம், இந்தியில் 15ம் சேர்த்து மொத்தம் 113 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.கல்வித் தகுதி : இரண்டு பிரிவுகளுக்குமே குறைந்த பட்சம் பிளஸ் 2 அளவிலான படிப்பு அல்லது பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கூடுதலாக கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். இந்தி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கம்ப்யூட்டரில் யூனிகோடு முறையில் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.300/-ஐ டி.டி., வாயிலாக BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறனறியும் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Assistant General Manager (HR), BECIL's Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).கடைசி நாள் : 2017 மார்ச் 1விபரங்களுக்கு : http://becil.dealnxt.com/Admin_Doc/Advertisement_DEO_ 7feb17.pdf






      Dinamalar
      Follow us