sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

விமானநிலையத்தில் கிளார்க் வாய்ப்பு

/

விமானநிலையத்தில் கிளார்க் வாய்ப்பு

விமானநிலையத்தில் கிளார்க் வாய்ப்பு

விமானநிலையத்தில் கிளார்க் வாய்ப்பு


PUBLISHED ON : பிப் 21, 2017

Google News

PUBLISHED ON : பிப் 21, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிப்பது ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., நிறுவனம். சர்வதேச பிரசித்தி பெற்ற இந்நிறுவனத்தின் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் போன்றவற்றில் ஜூனியர் அசிஸ்டன்ட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள் : ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் 147 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: 31.03.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவு ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும்.இதர தேவைகள் : எல்.எம்.வி., அல்லது ஹெவி டிரைவிங் லைசென்ஸை குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றவராக இருக்க வேண்டும். விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். என்.சி.சி.,யில் 'பி' சான்றிதழ், பிளஸ் 2 அளவிலான படிப்பில் கம்ப்யூட்டரில் பயிற்சி, பயர் சர்வீஸ் தொடர்பான அனுபவம் போன்றவை இருந்தால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். உயரம் குறைந்த பட்சம் 167 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். தமிழகத்தில் திருச்சியிலும், ஐதராபாத், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய ஏதாவது ஒரு மையத்திலும் எழுத்துத் தேர்வை எதிர்கொள்ளலாம்.விண்ணப்பிக்க : விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய சான்றிதழ் நகல்களை அட்டெஸ்ட் செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் ரூ.100/-க்கான டி.டி.,யையும் இணைக்க வேண்டும்.THE REGIONAL EXECUTIVE DIRECTOR, Airports Authority of India, Southern Region,CHENNAI - 600 027

கடைசி நாள் : 2017 மார்ச் 31.






      Dinamalar
      Follow us