/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ரயில்வேயில் இன்ஜினியர் பணியிடங்கள்
/
ரயில்வேயில் இன்ஜினியர் பணியிடங்கள்
PUBLISHED ON : பிப் 21, 2017
இர்கான் என்பது இந்திய ரயில்வேயின் கட்டுமானம் தொடர்புடைய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் எக்சிகியூடிவ் டிரெய்னி பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம்: எக்சிகியூடிவ் டிரெய்னி பிரிவில் 5ம், ஜூனியர் இன்ஜினியர் எஸ் அண்டு டி பிரிவில் 3ம், ஜூனியர் இன்ஜினியர் எஸ் அண்டு டி - டிசைன் பிரிவில் 2ம், ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிகலில் 10ம் காலியிடங்கள் உள்ளன.வயது: இர்கான் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 33 வயதுக்குட்பட்டவராகவும், ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : இர்கான் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே படிப்புகளை மூன்று வருட டிப்ளமோ படிப்பாக முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பக் கட்டணம் : எக்சிகியூடிவ் பதவிக்கு ரூ.1000/- மற்றும் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு ரூ.500/-ஐயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.Joint General Manager/HRM, Ircon International Limited, C-4 District Centre, Saket, New Delhi - 110 017. கடைசி நாள் : 2017 பிப்., 27, விபரங்களுக்கு : www.ircon.org