sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

/

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை


PUBLISHED ON : பிப் 14, 2017

Google News

PUBLISHED ON : பிப் 14, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

57. 'இவ்வனைத்தும் ஆத்மன்' என்று கூறும் உபநிடதம்:

அ) ஆந்தரேய ஆ) பிராட்ரான்யக்கா இ)முண்டகா ஈ) கான்டெர்யா

58. ஒழுக்காற்றுக் கோட்பாடுகளுக்கு அடிப்படையில் இருப்பது :

1) தனி மனிதனின் மதிப்பும் சிறப்பும்

2) சமூக உறவின் மதிப்பும் சிறப்பும்

3) அரசியல் உறவின் மதிப்பும் சிறப்பும்

4) பொருளாதார உறவின் மதிப்பும் சிறப்பும்

மேற்சொன்ன எந்த கூற்று சரியாக பொருள் தரக்கூடியது

அ) 3-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி

இ) 1-மட்டும் சரி ஈ) 4-மட்டும் சரி

59. வேதங்கள் குறிப்பிடா கடவுளை தெரிவு செய்க

1)வருணா 2)கார்த்திகேயன் 3)இந்திர 4) அக்னி இதில் எது சரி

அ) 1-மற்றும் 4-சரி ஆ) 4-மட்டும் சரி

இ) 1-மற்றும் 2-சரி ஈ) 2-மட்டும் சரி

60. மாத்வரின்படி, ஆன்மா இவற்றிலிருந்து வேறுபடுகின்றது

1)கடவுள் 2) உலகம் 3) இரண்டும் 4) எதுவும் இல்லை

இதில் எது சரி

அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி

இ)3-மட்டும் சரி ஈ) 4-மட்டும் சரி

61. உபநிடதங்களின் போதகங்கள் இப்படியும் சில சமயம் அழைக்கப்படும்

அ) வேதோபனிஷத் ஆ)உபாஸனம் இ)வேதாந்த சூத்ரம் ஈ) சுருதிகள்

62. இந்து மதப்படி இறப்பு கடவுளான யமன் தன் வாகனமாக வைத்திருக்கிற மிருகம்

அ) எருமை ஆ) பசு இ) யானை ஈ) ஒட்டகம்

63. உபநிடதங்கள், பிராமணங்கள் மற்றும் வேதங்கள் ஆகியவை மூன்று ஞான நூல்களாக கருதப்படுவது

அ) வெளிபடுத்தப்பட்ட உரை நூல் ஆ) ஏற்புடைய உரை நூல்

இ) கடவுள் கொடுத்த உரை நூல் ஈ) அனுபவம் தந்த உரை நூல்

64) பொருத்துக

இடம் - பெயர்

அ) வேதம் 1) இரண்டு

ஆ) இதிகாசம் 2) ஆறு

இ) புராணங்கள் 3) நான்கு

ஈ) தரிசனங்கள் 4) பதினெட்டு

குறியீடுகள்

அ) ஆ இ ஈ

அ) 3 1 4 2

ஆ) 2 4 1 3

இ) 1 3 2 4

ஈ) 4 2 1 3

65) பூர்வமீமாம்ஸாபடி

1) ஆன்மாவின் குணங்கள் இச்சையும் வெறுப்பும்

2) ஆன்மா மனதுடன் தொடர்பு கொள்வதால்

இதில் எது சரி

அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி இ) 1-ம் மற்றும் 2-ம் சரி ஈ) 1 -தவறு

66) உத்தாலகருக்கும் ஸ்வேதகேதுவிற்கும் இடையே உள்ள உரையாடல் இடம் பெறுவது

அ) கேனோபனிடதம் ஆ) பிரசுதராண்ய உபநிடதம்

இ) சாந்தோக்கிய உபநிடதம் ஈ) முண்டக உபநிடதம்

67) பின்வரும் வரிகளை கவனி:

1) சிவனின் வாகனம் நந்தி,

2) அம்பாளின் வாகனம் புலி

3) விநாயகரின் வாகம் மூஷிகம்

இதில் எது சரி

அ) 1-ம் மற்றும் 2-ம் சரி ஆ) 1-ம் மற்றும் 3-ம் சரி

இ) 2-ம் மற்றும் 3-ம் சரி ஈ) 1, 2, 3 சரி

68) சாங்கியாவின் படி

1) புருடர்கள் பல

2) புருடன் ஒன்றே ஒன்று உலகத்திற்கு என்றால் பிறப்பு இறப்பு ஒன்றே ஆகும்

இதில் எது சரி

அ) 1 சரி ஆ) 1-மற்றும் 2- சரி

இ) 1 -சரி 2 தவறு ஈ) 1- மற்றும் 2 தவறு

69) சாங்கியாவின் படி புருடன்

அ) சுத்த உணர்வு ஆ) செயல்திறன் பெற்றவர்கள்

இ) பொருள் ஈ) எதுவும் இல்லை

70) வேதத்தில் கடவுள் மேல் உள்ள பக்தியையும் அவரது புகழையும் எடுத்துக்காட்ட “ஹீனோதியிசம்” என்ற வார்த்தையை கொடுத்தவர்

அ) மாக்ஸ் வெப்பர் ஆ) கார்ல் மாக்ஸ்

இ) மாக்ஸ் முல்லர் ஈ) இதில் எதுவும் இல்லை

விடைகள்: 57.ஈ 58.இ 59.ஈ 60.இ 61.அ 62.அ 63.அ 64.அ 65.இ 66.இ 67.ஆ 68.ஆ 69.அ 70.இ

தொடரும்






      Dinamalar
      Follow us