/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
டில்லி சபார்டினேட் சர்வீசஸ் பணியிடங்கள்
/
டில்லி சபார்டினேட் சர்வீசஸ் பணியிடங்கள்
PUBLISHED ON : ஆக 15, 2017
டில்லி சபார்டினேட் சர்வீஸஸ் செலக்சன் போர்டு எனப்படும் டி.எஸ்.எஸ்.எஸ்.பி., அமைப்பு டில்லி அரசின் காலியிடங்களை நிரப்புவதற்கான பிரத்யேக அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பாக அங்கு காலியாக இருக்கும் 15 ஆயிரத்து 58 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம் : ஜுனியர் இன்ஜினியர் பிரிவில் சிவிலில் 70, மெக்கானிகலில் 15, பட்வாரியில் 140, லீகல் அசிஸ்டென்டில் 13, ஸ்பெஷல் எஜூகேட்டர் - பிரைமரியில் 1540, டீச்சர் - பிரைமரியில் 4366, ஸ்பெஷல்
எஜூகேஷன் டீச்சரில் 496, அசிஸ்டென்ட் டீச்சர் - நர்சரியில் 320, அசிஸ்டென்ட் டீச்சர் - பிரைமரியில் 1394, பிசிக்கல்
எஜூகேஷன் டீச்சரில் 919, டிராயிங் டீச்சரில் 295, டொமஸ்டிக் சயின்ஸ் டீச்சரில் 199, பி.ஜி.டி., ஹோம் சயின்சில் 114, பி.ஜி.டி., பிசிக்கல் எஜூகேஷனில் 86, பி.ஜி.டி., பைன் ஆர்ட்சில் 17, பி.ஜி.டி., மியூசிக்கில் 3, பி.ஜி.டி., பயாலஜியில் 8, பி.ஜி.டி., கெமிஸ்ட்ரியில் 21, பி.ஜி.டி., காமர்சில் 28, பி.ஜி.டி., எகனாமிக்ஸில் 32 உள்ளிட்ட பி.ஜி.டி., பிரிவிலான பல்வேறு பதவிகளும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 58 இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
வயது : விண்ணப்பதாரர் 36 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. முழுமையான தகவல்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
விண்ணப்பக் கட்டணம் : டி.எஸ்.எஸ்.எஸ்.பி.,யின் மேற்கண்ட இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
கடைசி நாள் : 2017 செப்., 15
விபரங்களுக்கு : https://dsssbonline.nic.in/

