/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள சி.டி.எஸ்., தேர்வு
/
யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள சி.டி.எஸ்., தேர்வு
PUBLISHED ON : ஆக 15, 2017

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அமைச்சகப் பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் எக்சாம், 2017ஐ நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டேராடூனிலுள்ள இந்தியன் மிலிடரி அகாடமி, எழிமலாவிலுள்ள இந்தியன் நேவல் அகாடமி, ஐதராபாத்திலுள்ள ஏர்போர்ஸ் அகாடமி, சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி ஆகியவற்றிலுள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலியிட விபரம் : ஐ.எம்.ஏ.,வில் 100, ஐ.என்.ஏ.,வில் 45, ஏ.எப்.ஏ.,வில் 32, ஓ.டி.ஏ.,வில் 12 சேர்த்து மொத்தம் 189 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது : விண்ணப்பிக்கும் இடத்திற்கு தகுந்தபடி வயது மாறுபடுகிறது. சரியான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி : ஐ.எம்.ஏ., மற்றும் ஓ.டி.ஏ.,வுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு தேவைப்படும். நேவல் அகாடமிக்கு இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு தேவைப்படும். ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிக்க இயற்பியல், வேதியியல், கணிதத்துடன் கூடிய பட்டப் படிப்பு தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்தில் அறியவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.200/-ஐ யு.பி.எஸ்.சி.,யின் கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையிலேயே இந்தத் தேர்வுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 2017 செப்., 8
விபரங்களுக்கு : http://www.upsc.gov.in/examinations/Combined%20Defence%20Services%20Examination(I),%202017

