தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் காலி இடங்கள்

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் காலி இடங்கள்

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் காலி இடங்கள்


PUBLISHED ON : ஏப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்ஜினியரிங் டிப்ளமோ தகுதி:



இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற எண்ணெய் நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.பி.சி.எல்., நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் கொச்சி சுத்திகரிப்பு மையத்தில் ஜெனரல் ஒர்க்மேன் - பி பிரிவில் உள்ள 45 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

இவற்றில் 20 இடங்கள் கெமிக்கல் பிரிவிலும், 19 இடங்கள் மெக்கானிகல் பிரிவிலும், 3 இடங்கள் எலக்ட்ரிகல் பிரிவிலும், இன்ஸ்ட்ருமென் டேஷன் பிரிவில் 3 இடங்கள் என்ற அடிப்படையில் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேவைகள் :



பி.பி.சி.எல்., நிறுவனத்தின் ஜெனரல் ஒர்க்மேன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.03.2013 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக கெமிக்கல், மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பைக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

மற்ற விபரங்கள்:



பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பப் படிவ மாதிரியில் தங்கள் விண்ணப்பங்களை நிரப்பி, உரிய சான்றிதழ் ஆவணங்களின் நகல்களையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி:



Senior Manager (Recruitment & Promotion ),

BPCL & Kochi refinery,

PB NO 2, Ambalamugal,

Kochi - 682 302.

விண்ணப்பிக்க இறுதி நாள் :



22.04.2013

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us