தமிழ் நாட்டின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். தமிழக அரசில் உதவி பொறியாளர் (தொழிற்சாலைகள்) பிரிவில் உள்ள 40 காலி இடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள உதவி பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக மெக்கானிகல், புரொடக்சன், எலக்ட்ரிகல், ஆட்டொமொபைல், கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி போன்ற ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வாயிலாக டிப்ளமோ படிப்பை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் முடித்துவிட்டு குறைந்த பட்சம் 6 மாத காலத்திற்கு பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இதே போல் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றில் சூபர்வைசர் அல்லது பொருட்களை உற்பத்தி செய்வதில் பணி அனுபவம் பெற்றவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
மற்றவை:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதற்காக ரூ.150/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலமாக செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு என்ற இரண்டு நிலைகளில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு சென்னையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி இடங்களுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :
17.04.2013
கட்டணம் செலுத்த இறுதி நாள் :
19.04.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் :
09.06.2013