PUBLISHED ON : ஜன 21, 2013

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் துறை வளரத் துவங்கிய 70களில் கெல்ட்ரான் நிறுவனம் 1973ல் நிறுவப்பட்டது. கேரள மாநிலத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சி அடைவதற்கு கெல்ட்ரான் நிறுவனம் ஒரு முக்கிய வினையூக்கியாக செயல்படத் துவங்கியது. இந்த நிறுவனம் துவங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உற்பத்தி மையம் நிறுவப்பட்டது.
தற்சமயம் இந்த நிறுவனத்தின் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 ஆயிரம் பேர் எலக்ட்ரானிக்ஸ் துறையினால் பணிப் பயன் பெற்றுள்ளார்கள். தற்சமயம் இந்தியாவின் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் குழுமங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற கெல்ட்ரான் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:
கெல்ட்ரான் நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் பிரிவில் 4 இடங்களும், இன்ஜினியர் பிரிவில் 42 இடங்களும், எச்.ஆர்., பிரிவில் ஒரு இடமும், டெக்னிகல் அஸிஸ்டென்ட் பிரிவில் 41 இடங்களும், ஆபரேட்டர்/டெக்னீசியன் பிரிவில் 12 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: மேலே குறிப்பிடப்பட்ட கெல்ட்ரான் நிறுவனத்தின் காலி இடங்களில் எக்ஸிக்யூடிவ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இன்ஜினியரிங் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், இ.இ.இ., மெக்கானிகல், கெமிக்கல் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எச்.ஆர்., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.பி.ஏ.,வில் எச்.ஆர்.,ரை சிறப்பு படிப்பாக முடித்திருக்க வேண்டும்.
டெக்னிகல் அஸிஸ்டென்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரானிக்ஸ், சி.எஸ்., ஹார்டுவேர் மெயின்டனன்ஸ், மெக்கானிகல், சிவில், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் மூன்று வருட கால இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பைக் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
ஆபரேட்டர் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எம்.ஆர்.ஏ.சி., எம்.ஆர்.டி.வி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.மற்றவை:
கெல்ட்ரான் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளைப் பற்றிய முழுமையான விபரங்களை முதலில் பின்வரும் இணையதளப் பகுதிக்கு சென்று அறியவும். இதன் பின்னர் தகுதிகள் பொருந்தும் பட்சத்தில் இந்தப் பதவிகளுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :
29.01.2013இணையதள முகவரி:
