தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அதிகாரிகள் பணி வாய்ப்பு

அதிகாரிகள் பணி வாய்ப்பு

அதிகாரிகள் பணி வாய்ப்பு


PUBLISHED ON : ஜன 21, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வங்கிகளில் உள்ள கிளரிக்கல் மற்றும் அதிகாரி பதவிகளை ஐ.பி.பி.எஸ்., அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்புவது அமலாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த அமைப்பின் சார்பாக இரண்டு முறை கிளரிக்கல் காலி இடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. 20 அரசுத் துறை வங்கிகளில் உள்ள சிறப்பு அதிகாரிகளைப் பணியில் அமர்த்துவதற்கான பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை ஐ.பி.பி.எஸ்., வெளியிட்டுள்ளது.

பிரிவுகள்:



இத்தேர்வின் மூலமாக ஐ.டி., ஆபிசர், அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, டெக்னிகல் ஆபிசர், எச்.ஆர்.,/பெர்சனல் ஆபிசர், மார்க்கெடிங் ஆபிசர் போன்ற முதல் நிலை ஊதியம் பெறும் அதிகாரிகளையும், சார்டர்டு அக்கவுன்டன்ட் என்ற இரண்டாம் நிலை ஊதியம் பெறும் அதிகாரிகளையும் பணி நியமனம் செய்யப்பட உள்ளது.

தேவைகள்:



ஐ.பி.பி.எஸ்., அமைப்பின் பொதுத் துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.01.2013 அன்று 20 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி தேவைப்படும். ஐ.டி., அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க கம்ப்யூட்டர் தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பும், அக்ரிகல்சர் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பென்டரி, அக்ரிகல்சர் போன்ற பிரிவில் பட்டப் படிப்பும், ராஜ்பாஷா அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க இந்தியில் முது நிலைப் பட்டப் படிப்பும், சட்ட அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க சட்டத்தில் பட்டப் படிப்பும், டெக்னிகல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு அல்லது பி.பார்ம்., படிப்பும், எச்.ஆர்.,/பெர்சனல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க தொடர்புடைய பிரிவில் பட்டப் படிப்பு அல்லது முது நிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு தேவைப்படும்.

மார்க்கெடிங் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க மார்க்கெட்டிங்கில் எம்.பி.ஏ., அல்லது பி.ஜி.டி.பி.ஏ., அல்லது பி.ஜி.டி.பி.எம்., படிப்பு தேவைப்படும். சார்டர்டு அக்கவுன்டன்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தேவைகளை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

இதர தகவல்கள்:



இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.400/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை இந்தத் தேர்வில் பங்கு பெறும் 20 தேசியமயமாக்கப்பட்ட கோர் வங்கிச் செயல்பாடு வசதி கொண்ட கிளை ஏதாவது ஒன்றில் செலுத்தலாம். எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இணையதளத்தைப் பார்த்து முழு விபரங்களை அறியவும், விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம் கட்ட, ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்:



28.01.2013

ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள்:



2013 மார்ச் 16, 17

இணையதள முகவரி:



www.ibps.in/career_pdf/CWE_SPL_II.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us