தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/"கேட்' தேர்வு முடிவு - ஒரு பார்வை

"கேட்' தேர்வு முடிவு - ஒரு பார்வை

"கேட்' தேர்வு முடிவு - ஒரு பார்வை


PUBLISHED ON : ஜன 14, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.ஐ.எம்., உள்ளிட்ட இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில், முதுகலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு நடந்த 'கேட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜன., 9ல் வெளியிடப்பட்டது. கடந்த அக்., 11 முதல் நவ., 6 வரை நடந்த இத்தேர்வை 1,91,642 மாணவர்கள் எழுதினர். கோழிக்கோடு ஐ.ஐ.எம்., இதனை நடத்தியது. இதில் 10 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதித்துக்காட்டியுள்ளனர். இவர்களில் 8 பேர் ஐ.ஐ.டி., மாணவர்கள். மேலும் இந்த 10 பேரில், 9 பேர்

இன்ஜினியரிங் மாணவர்கள், ஒருவர் அறிவியல் பிரிவை சேர்ந்தவர். 10 பேரில் ஐந்து பேர் இறுதியாண்டு படிப்பவர்கள்.

* மாணவிகளில் அதிகபட்சமாக நான்கு மாணவிகள் 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

* 255 மாணவிகள், 1,640 மாணவர்கள் 99 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக மும்பை மண்டலத்தில் இருந்து 180 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்து, டில்லியிலிருந்து 168 பேரும், பெங்களூருவிலிருந்து 157 பேரும், ஐதராபாத்திலிருந்து 105 பேரும், கோல்கட்டாவிலிருந்து 92 பேரும், சென்னை மண்டலத்தில் இருந்து 85 பேரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

* 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்களில், கலைப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் வெறும் ஒரு சதவீதம் பேர் தான்.இந்த வரிசையில் வணிக பிரிவில் 1.3 சதவீத பேரும், ஆர்க்கிடக்சர் 11.8 சதவீதம் பேரும், இன்ஜினியரிங் பிரிவில் 6.8 சதவீதம் பேரும், மருத்துவ பிரிவில் இருந்து 4.1 சதவீதம் பேரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.

* ஆர்க்கிடக்சர் பிரிவில் இருந்து அதிகபட்ச மதிப்பெண் 99.71. மருத்துவப்பிரிவில் அதிகபட்ச மதிப்பெண் 99.97

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை



மகாராஷ்டிராவில் உள்ள மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 (இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம்) அறிவியல் பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 2012, டிச.31 அன்று 17 வயது பூர்த்தியாகியிருப்பது அவசியம். இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு http://www.mgims.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us