தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தமிழக அஞ்சல் துறையில் காலி இடங்கள்

தமிழக அஞ்சல் துறையில் காலி இடங்கள்

தமிழக அஞ்சல் துறையில் காலி இடங்கள்


PUBLISHED ON : ஆக 20, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் வழங்கப்படும் சேவைகளில் அஞ்சல் துறை எனப்படும் போஸ்டல் சர்வீசிற்கு 'புனிதமான தொழில்' என்ற அடைமொழி வழங்கப்படுகிறது. லாப நோக்கமற்ற மக்கள் சேவையே இந்தத் துறையின் தாரக மந்திரமாக உள்ளது. இன்றைய தலைமுறை கூரியர், இ-மெயில் போன்ற நவீன சேவைகளில் முடங்கிவிட்ட போதும் இன்றளவும் அஞ்சல் துறையின் மாண்புகள் போற்றத்தக்க வண்ணமே உள்ளதுதான் உண்மை. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் இருந்த காலத்தில்தான் தமிழகத்தில் அஞ்சல் துறையின் அடித்தளம் இடப்பட்டது. ஒரு நாளைக்கு 80 லட்சம் தபால்களை தமிழக அஞ்சல் துறை கையாள்கிறது என்ற தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற தமிழக அஞ்சல் துறை அலுவலகங்களில் உள்ள 6 பிரிவுகளிலான போஸ்டல் அஸிஸ்டெண்ட் காலி இடங்கள் 618ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள்:

தமிழக அஞ்சல் துறையில் போஸ்டல் அஸிஸ்டெண்ட், சார்டிங் அஸிஸ்டெண்ட், போஸ்டல் அஸிஸ்டெண்ட் - பாரின் போஸ்ட், மெயில் மோட்டார் சர்வீஸ், ரிடர்ண்டு லெட்டர் ஆபிஸ் ஆகிய பல்வேறு பிரிவுகளில் மேற்கண்ட காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை அனைத்தும் தமிழத்தின் பல்வேறு ஊர்களிலும் உள்ள காலி இடங்களாகும்.

தேவைகள்:

தமிழ் நாடு போஸ்டல் சர்வீசின் போஸ்டல் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்பை குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். மெட்ரிக் அளவிலான படிப்பில் இந்தியைப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழியை நன்றாகப் பேசும், எழுதும் மற்றும் வாசிக்கும் திறமையும் தேவைப்படும்.

விபரங்கள்:

தமிழக அஞ்சல் துறையின் அஞ்சலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். முதலில் ரூ.50/- கொடுத்து விண்ணப்பங்களை தலைமைத் தபால் நிலையங்கள் மற்றும் தெரிவு செய்த சில தபால் நிலையங்களிலிருந்து பெற வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 'இந்தியா போஸ்ட்' வாயிலாக பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி:

Direct Recruitment Cell,

New Delhi HO,

New Delhi 110 001.

விண்ணப்பம் வாங்க இறுதி நாள் :

25.09.2012

விண்ணப்பிக்க இறுதி நாள் :

01.10.2012

இணையதள முகவரி:

http://tamilnadupost.nic.in/rec/DoP_TN_DR2012.jpg

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us