PUBLISHED ON : ஆக 27, 2012
சிறந்த படைத்திறன், தொழில் நுட்ப ரீதியான அனுகுமுறை, பிரம்மாண்டமான எண்ணிக்கையிலான வீரர்கள் ஆகியவற்றுக்காக இந்தியாவின் முக்கிய மூன்று படைகளில் ஒன்றான இந்திய ராணுவம் சர்வதேச நாடுகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது.
பிரசித்தி பெற்ற இந்திய ராணுவத்தில் இன்ஜினியரிங் பிரிவுகள் பலவற்றில் உள்ள ஆண்களுக்கான டெக்னிகல் பிரிவு பெர்மனண்ட் கமிஷன் ஆபிசர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது.பிரிவுகளும் காலி இடங்களும்:
இந்திய ராணுவத்தின் பெர்மனண்ட் கமிஷன் ஆபிசர் காலி இடங்கள் 60ல் சிவில் பிரிவில் 12ம், ஆர்கிடெக்சர்/பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜியில் 2ம், எலக்ட்ரிகலில் 8ம், மெக்கானிகலில் 10ம், புரொடக்சனில் 3ம், எலக்ட்ரானிக்ஸில் 7ம் கம்யூனிகேஷன்/டெலிகாமில் 11ம், புட்டெக்னாலஜி /பயோடெக்/பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்கில் 2ம், கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்சில் 4ம், கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 1ம் நிரப்பப்பட உள்ளன.தேவைகள்:
தற்போது இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டு இன்ஜினியரிங் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக மேற்கண்ட பிரிவுகள் ஏதாவது ஒன்றில் படிப்பவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1989க்குப் பின்னரும் 01.07.1995க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். இவற்றுடன் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் கட்டாயத் தேவையாக வரையறுக்கப்பட்டுள்ளன. உயரம் குறைந்த பட்சம் 157.5 செ.மீ.,ரும், இதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவு குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும். உளவியல் ரீதியான எழுத்துத் தேர்வு, குழு தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை என்ற நிலைகளை வெற்றிகரமாகக் கடந்து இந்தப் பதவியை அடைய வேண்டும்.இதர விஷயங்கள்:
விண்ணப்பங்களை இணையதளத்தில் கண்ட படிவ மாதிரியில் 30ஙீ20 அளவு வெள்ளைத் தாளில் நிரப்ப வேண்டும். விண்ணப்பத்தை வெள்ளை நிற கவரில் வைத்து சிவப்பு நிற மையினால் விண்ணப்பிக்கும் இன்ஜினியரிங் பிரிவை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை 28.09.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.முகவரி:
HQ Southern Command,
Pune ( Maharashtra ),
PIN 411001.இணையதள முகவரி:
