கெய்ல் இந்தியா லிமிடெட் நிறுவனம் இயற்கை எரிவாயு தொடர்புடைய பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இயற்கை எரிவாயு கண்டறிதல், உற்பத்தி செய்தல், பதப்படுத்துதல், பங்கிடுதல் மற்றும் வணிகம் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சர்வ தேச அளவில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவிலான எக்சிக்யூடிவ் டிரெய்னிக்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:
கெய்ல் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூடிவ் பதவி மெக்கானிகல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல் என்ற 4 பிரிவுகளில் முறையே 62, 30 33 மற்றும் 28 என்ற எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்:
கெய்ல் நிறுவனத்தில் சிறப்பு நிலை பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15.01.2013 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
இந்தப் பணி இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. இந்தப் பதவி கேட் 2013 மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்பப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மற்றவை:
கெய்ல் நிறுவனத்தின் மேற்கண்ட எக்சிக்யூடிவ் டிரெய்னி காலி இடங்களுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கான அடிப்படைத் தகுதியான கேட் தேர்வை எழுதுவதற்கான பதிவு 18.01.2013 அன்று நிறைவு பெறுகிறது. வரும் 2013 ஆண்டிற்கான இந்த நிறுவனத்தின் ஆன்-லைன் கேட் தேர்வு 20.01.2013 அன்று நடைபெறும் என்றும், ஆப்-லைனிலான கேட் தேர்வு 10.02.2013 அன்று நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
இணையதள முகவரி:
https://gailebank.gail.co.in/Online_recruitment_et/career.asp