ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்
PUBLISHED ON : ஆக 13, 2012

இந்தியாவைச் சார்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ஓ.என்.ஜி.சி., ( ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் ) என்ற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறது. எரிசக்தித் துறை சார்ந்த இந்த நிறுவனம் சர்வதேச அளவில் எண்ணெய்
மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் 3 ஆவது இடத்திலும், எரிசக்தித் துறையில் 23 ஆவது இடத்திலும் 2009 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியரிங் டிரெய்னி பிரிவில் பணி நியமனங்களை செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள்: கிளாஸ் 1 எக்ஸிக்யூடிவ் பிரிவிலான கிராஜூவேட் இன்ஜினியரிங் டிரெய்னி பதவி ஜியாலஜி, ஜியோ-பிஸிக்ஸ், ரிசர்வாயர், வேதியியல், புரொகிராமிங், புரொடக்சன், டிரில்லிங், சிமெண்டிங், மெக்கானிகல், எலக்ட்ரிகல், இ அண்டு டி., இன்ஸ்ட்ரூமெண்டேஷன், சிவில், டிரான்ஸ்போர்ட், நிதி, எச்.ஆர்., மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், மெடிக்கல் மற்றும் செக்யூரிட்டி ஆகியவற்றில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற விபரங்கள்: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் மாறுபடுகிறது. எனவே முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து அறியவும். மாத ஊதியம் ரூ.24 ஆயிரத்து 900 முதல் ரூ.50 ஆயிரத்து 500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு, இதில் வெற்றி பெறுபவர்கள் சைகோமெட்ரிக் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி.,யின் கிராஜூவேட் இன்ஜினியரிங் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 26.08.2012
இணையதள முகவரி : www.ongcindia.com
