தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய பாதுகாப்பு அமைச்சக பணிவாய்ப்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சக பணிவாய்ப்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சக பணிவாய்ப்பு


PUBLISHED ON : ஆக 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் பாதுகாப்புக்கு அடித்தளமாக இருக்கும் இந்திய ராணுவ உச்ச பட்ச நிர்வாகியாக நமது குடியரசுத் தலைவர் இருக்கிறார். இந்தியாவின் பாதுகாப்பை முடிவு செய்வதில் பாதுகாப்பு அமைச்சகமே முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பது, அதனை பாதுகாப்புப் பணிகளில் செயல்படுத்துவது என்று முக்கிய முடிவுகளை இந்த அமைச்சகமே எடுக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையகத்தில் உள்ள டிராப்ட்ஸ்மேன் - கிரேடு 3 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. மூன்று பிரிவுகளிலான இந்தப் பதவிக்கு மொத்தம் 116 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: பாதுகாப்பு அமைச்சகத்தின் டிராப்ட்ஸ்மேன் பதவியில் கன்ஸ்ட்ரக்சன் (சிவில்) பிரிவில் 31 காலி இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 47 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 38 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்: மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த தலைமையகத்திலான டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். அதே போல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஐ.டி.ஐ., மூலமாக இரண்டு வருட டிராப்ட்ஸ்மேன் படிப்பை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி முடித்திருக்க வேண்டும்.

மற்றவை: இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் உரிய இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 03.09.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை ஜூலை 21 முதல் 27 தேதியிலான எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழைப் பார்த்து அறியவும்.

முகவரி:

Integrated Headquarter of

Ministry of Defence (Navy),

Directorate of Civilian

Personnel,

D&II Wing Sena Bhavan,

New Delhi 110011.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 03.09.2012

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us