/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு
/
பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு
PUBLISHED ON : டிச 17, 2024

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ.,) காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் (ஆண், பெண்) விண்ணப்பிக்கலாம்.
தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120 (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 /டெக்னிக்கல் அல்லாதது 10) கப்பல்அகாடமி 36 என மொத்தம் 406 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: 2.7.2006-1.7.2009க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்.சி.,/ எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.12.2024
விவரங்களுக்கு: upsc.gov.in