PUBLISHED ON : ஜூலை 16, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள 'இ-சேவை' மையங்களில் டெக்னிக்கல் பிரிவில் ஒப்பந்த பணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை 17, புதுக்கோட்டை 15, கோவை 14, மதுரை 13, திருப்பூர் 12, சிவகங்கை 11, கடலுார் 11, திருவள்ளூர் 11, திண்டுக்கல் 10, சேலம் 10, செங்கல்பட்டு 9, திருவண்ணாமலை 9, ஈரோடு 9, தஞ்சாவூர் 9 உட்பட மொத்தம் 298 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், பிரிவில் பி.எஸ்சி.,/ பி.சி.ஏ., / பி.இ.,/பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ.,
வயது: 35க்குள் (10.7.2024ன் படி)
பணிக்காலம்: ஓராண்டு
ஊதியம்: மாதம் ரூ. 15 ஆயிரம்
தேர்ச்சி முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரியில் பெற்ற மதிப்பெண், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 18.7.2024
விவரங்களுக்கு: mhc.tn.gov.in