/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்திய கப்பல் படையில் வாய்ப்பு
/
இந்திய கப்பல் படையில் வாய்ப்பு
PUBLISHED ON : ஏப் 18, 2017

நமது நாட்டின் கப்பல் படை தொழில் நுட்ப ரீதியாகவும், எண்ணிக்கை அடிப்படையிலும் உலகளவில் பலம் வாய்ந்ததாக உள்ளது. இதில் தற்போது ஆகுபேஷனல் தெரபிஸ்ட் /ஸ்பெஷல் எஜூகேட்டர்ஸ்/அசிஸ்டென்ட் டீச்சர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களை புது டில்லியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கல்ப் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு இந்தியக் கப்பல் படை திட்டமிட்டுள்ளது.
தகுதி: ஆகுபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இப்பிரிவில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். ஸ்பெஷல் எஜூகேட்டர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆர்.சி.ஐ.,யில் பதிவு செய்யப்பட்ட ஸ்பெஷல் எஜூகேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும், மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியராக குறைந்த பட்சம் ஒரு வருட காலம் பணியாற்றிய அனுபவமும் கூடுதலாக தேவைப்படும்.
அசிஸ்டென்ட் டீச்சர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு ஸ்பெஷல் எஜூகேஷன் பிரிவில் குறைந்த பட்சம் ஒரு வருட காலம்
பணியாற்றிய அனுபவம் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விரைவு தபால் அல்லது இமெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
The Commanding Officer (for Senior Education Officer), INS India,
Dalhousie Road,
New Delhi -110011
email: oninsindiasankalp123@gmail.com
கடைசி நாள்: 2017 ஏப்., 21.
விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_16_1718b.pdf

