/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
721 ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் காலியிடங்கள்
/
721 ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் காலியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 18, 2017

ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் பொதுத்துறை சார்ந்த எரிசக்தி நிறுவனம். சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்த நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றி வருகிறது. நமது நாட்டின் எரிசக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இங்கு கிராஜூவேட் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள 721 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: ஏ.இ.இ., சிமென்டிங் பிரிவில் மெக்கானிக்கலில் 15ம், பெட்ரோலியத்தில் 2ம், சிவிலில் 25ம், ஏ.இ.இ., டிரில்லிங் சார்ந்த மெக்கானிக்கலில் 56ம், பெட்ரோலியத்தில் 4ம், எலக்ட்ரிகலில் 82ம், எலக்ட்ரானிக்சில் 28ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 20ம், ஏ.இ.இ., மெக்கானிக்கலில் 74ம், ஏ.இ.இ., புரொடக்சன் சார்ந்த மெக்கானிக்கலில் 59ம், பெட்ரோலியத்தில் 29ம், கெமிக்கலில் 99ம், ஏ.இ.இ., ரிசர்வாயரில் 18ம், கெமிஸ்டில் 67ம், ஜியாலஜிஸ்டில் 38ம், சர்பேஸ் ஜியோபிஸிஸ்டில் 28ம், வெல்ஸ் ஜியோபிஸிஸ்டில் 25ம், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் ஆபிசரில் 30ம், புரொகிராமிங் ஆபிசரில் 9ம், டிரான்ஸ்போர்ட்
ஆபிசரில் 13ம் சேர்த்து 721 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. எனவே ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதியை இணையதளத்தைப் பார்த்து அறியவும். அதே போல் கல்வித் தகுதியுடன் கூடுதலாக 'GATE 2017' மதிப்பெண்களும் தேவை. விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து கேட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுவது கட்டாயம்.
தேர்ச்சி முறை: GATE தேர்வு மதிப்பெண்கள், நேர்காணல், சிறப்புத் தகுதிகளுக்கான கூடுதல் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சில
சான்றிதழ்களையும் அப்லோடு செய்ய வேண்டியிருக்கும்.
கடைசி நாள்: 2017 ஏப்., 27.
விபரங்களுக்கு: www.ongcindia.com/wps/wcm/connect/ongcindia/home/

