sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

/

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை


PUBLISHED ON : ஏப் 11, 2017

Google News

PUBLISHED ON : ஏப் 11, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

141. நாச்சியார் திருமொழியை எழுதியவர்

அ)திருமங்கை ஆழ்வார் ஆ) ஆண்டாள்

இ)பொய்கை ஆழ்வார் ஈ) இவர்களில் யாருமில்லை

142. சிவஞானபோதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்:

அ) ஹாய்சிங்டன், பையட் பாதிரியார், நல்லசாமிப் பிள்ளை, டேவிட் நவமணி மற்றும் சிவபாதசுந்தரம்

ஆ)பையட் பாதிரியார், போப் பாதிரியார், ஹாய்சிங்டன், நல்ல சாமிப்பிள்ளை மற்றும் டேவிட் நவமணி

இ) ஹாய்சிங்டன், டேவிட் நவமணி, சிவபாதசுந்தரம், பையட் பாதிரியார் மற்றும் தாமஸ் பாதிரியார்

ஈ) டேவிட் நவமணி, போப் பாதிரியார், ஹாய்சிங்டன், சிவபாதசுந்தரம் மற்றும் பையட் பாதிரியார்

143. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பிரதிட்டை கிரியையின் சரியான தொடர்

அ) குடமுழுக்கு - அட்டபந்தனம் - ஸ்பர்சாகுதி

ஆ) அனுஞ்சை - கணபதி பூஜை - வாஸ்து சாந்தி

இ) பிம்பசுத்தி - யாகசாலை - கலாகர்ஷணம்

ஈ) கும்பத்தாபனம் - காப்பு கட்டு - முளையீடு

144. இராமானுஜர் ஒப்புக்கொள்வது

1. ஜீவன் முக்தி 2. விதேஷ முக்தி

3. க்ரம முக்தி 4. எதுவும் இல்லை

இதில் எது சரி ?


அ) 2-மட்டும் சரி ஆ) 1- மற்றும் 2-ம் சரி

இ) 1, 2, 3 மற்றும் 4-ம் சரி ஈ) 1 மற்றும் 4-ம் சரி

145. பட்டினத்தாரின் தந்தை பெயர்

அ) சுப்ரமணிய செட்டியார் ஆ) அழகப்ப செட்டியார்

இ) சிதம்பரநாதன் செட்டியார் ஈ) சிவநேசன் செட்டியார்

146. கீழ்கண்ட பாடலைப் பாடியவர்

'நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளருக்கையில்சுட்ட

சட்டி சட்டுவம் கவிச்சுவை அறியுமோ ?'


அ) அருணகிரிநாதர் ஆ) பட்டினத்தார்

இ) சிவவாக்கியர் ஈ) பாம்பாட்டிச்சித்தர்

147. திருமூலர் எழுதிய நுால்

அ)திருப்புகழ் ஆ)திருவந்தாதி இ)திருமந்திரம் ஈ) திருவாசகம்

148. கன்னட இடையர்

அ) கொங்கணர் ஆ)கொரக்கர் இ)சட்டநாதர் ஈ) சுந்தரனந்தார்

149. 'கோயில் நான்மணிமாலை'யின் ஆசிரியர்

அ) தாயுமானவர் ஆ) அகப்பேய்சித்தர்

இ) பட்டினத்தார் ஈ) அருணகிரிநாதர்

150. 'குதம்பை' என்ற சொல்லின் பொருள்

அ) காதணியைக் குறிக்கும்

ஆ) காதணி அணிந்த பெண்ணைக்குறிக்கும்

இ) இரண்டையும் குறிக்கும்

ஈ) எதையும் குறிக்காது

விடைகள்

141) ஆ 142) அ 143) ஆ 144) அ 145) ஈ 146) ஆ 147) இ 148) ஈ 149) இ 150) இ

தொடரும்






      Dinamalar
      Follow us