தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சிறப்பு அதிகாரி பணியிடங்கள்

சிறப்பு அதிகாரி பணியிடங்கள்

சிறப்பு அதிகாரி பணியிடங்கள்


PUBLISHED ON : டிச 24, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 24, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி பொதுத் துறையில் இயங்கி வரும் சிறப்பான வங்கி என்பது நாம் அறிந்தததுதான். 1936ல் புனேயைத் தலைமையகமாகக் கொண்டு இந்த வங்கி துவங்கப்பட்டது. வங்கிகள் 1969ல் தேசியமயமாக்கப்பட்ட போது இந்த வங்கியைச் சேர்த்து மொத்தம் 14 வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டன. தற்போது இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருப்பதுடன் சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கல் ஆகியவற்றுக்காக அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் இள நிலை அதிகாரிப் பிரிவைச் சார்ந்த 45 சார்டர்டு அக்கவுண்டன்ட்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:



பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் சிறப்பு அதிகாரி பிரிவுக்கு விண்ணபிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். சிறப்புப் பணி நியமனம் என்பதால் அதற்குரிய கல்வித் தகுதி கட்டாயம் தேவைப்படும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் பெற்றிருப்பது தேவைப்படும். இந்தப் பதவிக்கு வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மற்றும் குழு விவாதம் ஆகிய தேர்ச்சி முறைகளை எதிர்கொள்ள வேண்டும்.

மற்றவை:



பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் சார்டர்டு அக்கவுண்டன்ட் பதவிக்கு ஆன்-லைன் முறையில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். இப்போது கிடைக்கும் சலானை வைத்து ஏதாவது ஒரு பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் ரூ;300/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை இதர வங்கிகளிலிருந்து என்.இ.எப்.டி., முறையிலும் செலுத்தலாம் என்ற போதும் விண்ணப்பிக்கும் முறையில் இதற்கேற்ற மாறுதல்களை கவனமாகக் கையாள வேண்டும். என்.இ.எப்.டி.,யில் பணம் செலுத்துபவர்கள் BANK OF MAHARASHTRA MAIN BRANCH PUNE என்ற பெயரில் 60103218200 என்ற அக்கவுண்ட் எண்ணில் MAHB0001150 என்ற ஐ.எப்.எஸ்.சி., கோடு எண்ணுடன் பணம் செலுத்த வேண்டும்.

முழுமையான விபரங்களை இந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்று முதலில் அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்-லைனில் பதிவு செய்ய, கட்டணம் செலுத்த இறுதி நாள் :



29.12.2012

இணையதள முகவரி:



www.bankofmaharashtra.in/ca/documents/Advertisement.pdf/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us