பாக்ட் நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பணிவாய்ப்பு
பாக்ட் நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பணிவாய்ப்பு
PUBLISHED ON : டிச 24, 2012

அ நிறம் | அளவு
உரத் தயாரிப்புடன் தொடர்புடைய பாக்ட் நிறுவனம் 1943ல் நிறுவப்பட்டது. இது 1947ல் பாக்ட் உத்யோகமண்டல், கேரளா என்ற பெயர் மாற்றம் பெற்றது. உரம், கார்ப்பரோலாக்டம் போன்றவற்றை உற்பத்தி செய்வது, இன்ஜினியரிங் பிரிவில் கன்சல்டன்சி சேவைகளை செய்வது, எக்விப்மெண்ட் பேப்ரிகேஷன் மற்றும் இவற்றை வணிகம் செய்யும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற பாக்ட் நிறுவனத்தில் 4 பிரிவுகளில் டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரெண்டிஸ்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:
இவற்றில் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி உச்ச பட்ச வயது 23 அல்லது 25 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டிஸஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரிகல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
டிரேடு அப்ரெண்டிஸஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிரிவைப் பொறுத்து பி.எஸ்.சி.,யில் இயற்பியல் அல்லது வேதியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., டிரேடு சான்றிதழை பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், சி.ஓ.பி.ஏ., பிளம்பர் ஆகிய பிரிவுகளில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வொகேஷனல் அப்ரெண்டிஸஸ் பிரிவுக்கு அக்கவுண்டன்சி, ஆடிட்டிங், ஆபிஸ் ரெட்டரிஷிப், சிவில் கன்ஸ்ட்ரக்சன் அண்டு மெயிண்டனன்ஸ் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
