/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புப்படையில் 'ஸ்டெனோ' பதவி
/
சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புப்படையில் 'ஸ்டெனோ' பதவி
PUBLISHED ON : ஜன 31, 2017
சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் என்பது இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட ஒரு காவல் படை.
பெரும்பாலும் இது சி.ஐ.எஸ்.எப்., என அறியப்படுகிறது. பின் இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டு தற்சமயம் விமான நிலையங்கள் உள்ளிட்ட கேந்திரமான இடங்களின் பாதுகாப்பையும் இணைத்து செயல்படுகிறது. இந்தப் படையில் தற்சமயம் ஸ்டெனோ பிரிவில் காலியாக உள்ள 79 உதவி ஆய்வாளர் (ஸ்டெனோ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 28.02.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பிளஸ் 2க்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் சிறப்புத் தகுதியாக ஸ்டெனோகிராபி முடித்திருக்க வேண்டும். 10 நிமிடங்களில் வழங்கப்படும் டிக்டேஷனை நிமிடத்திற்கு 80 வார்த்தைகளை எடுத்துக் கொள்பவராகவும், இதன் பின் கம்ப்யூட்டர் வாயிலாக ஆங்கிலமாக இருந்தால் 50 நிமிடங்களிலும், இந்தியாக இருந்தால் 65 நிமிடங்களிலும் டிரான்ஸ்கிரிப்ட் செய்யும் திறமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100க்கான போஸ்டல் ஆர்டரை சி.ஐ.எஸ்.எப்., என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க: மூன்று சுய விலாசமிட்ட கவர்களில் இரண்டில் ரூ.22/-க்கு போஸ்டல் ஸ்டாம்ப் ஒட்டி, பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தையும் இதர இணைப்புகளையும் சேர்த்து சம்பந்தப்பட்ட மண்டல் டி.ஐ.ஜி., அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கடைசி நாள்: 2017 பிப். 27
விவரங்களுக்கு: http://www.cisf.gov.in/RRs/asi%20steno%20184%20dt%2021.03.13.pdf

