/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஒடிசா மின் நிறுவனத்தில் டெக்னிகல் காலியிடங்கள்
/
ஒடிசா மின் நிறுவனத்தில் டெக்னிகல் காலியிடங்கள்
PUBLISHED ON : மார் 28, 2017
ஒடிசா மாநிலத்தின் மின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஒடிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஓ.பி.டி.சி.எல்., நிறுவனம் திறம்பட இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவுகளில் காலியாக உள்ள 150 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: ஜூனியர் மெயின்டனென்ஸ் அண்டு ஆபரேட்டர் டிரெய்னி பிரிவிலான 150 இடங்களில் எஸ்.சி., பிரிவினருக்கு 24 இடங்களும், எஸ்.டி.,
பிரிவினருக்கு 33 இடங்களும், எஸ்.இ.பி.சி., பிரிவினருக்கு 16 இடங்களும், இடஒதுக்கீட்டில் இல்லாத 77 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.01.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி.,
பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை உள்ளது.
கல்வித் தகுதி: பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். என்.டி.சி., அல்லது என்.சி.வி.டி., சான்று பெற்ற எலக்ட்ரீசியன் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் மூலமாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய்.
கடைசி நாள்: 2017 ஏப்., 24
விபரங்களுக்கு: www.optcl.co.in

