தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/டெக்னிகல் காலியிடங்கள்

டெக்னிகல் காலியிடங்கள்

டெக்னிகல் காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 01, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்டை நாடுகளுடனான நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை. பாகிஸ்தானுடனான போரின் உணர்தலின் விளைவாகவே இந்தப்படை உருவாக்கப்பட்டது.

இந்தப் படையில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்கள் 49ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள்: ஜூனியர் இன்ஜினியர் - சப்-இன்ஸ்பெக்டர் - எலக்ட்ரிகலில் 20ம், சப்-இன்ஸ்பெக்டர் - ஒர்க்சில் 29ம் சேர்த்து மொத்தம் 49 காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எலக்ட்ரிகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். ஒர்க்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/--ஐ 'டி.டி.,' அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறனறியும் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவமாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளைச் சேர்த்து பரிந்துரைக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.06.2015

இணையதள முகவரி: <http://bsf.nic.in/doc/recruitment/r153.pdf> மற்றும் <http://bsf.nic.in/doc/recruitment/r154.pdf>

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us