தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலை

ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலை

ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலை


PUBLISHED ON : ஜூன் 01, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களைத் தயாரிப்பதில் கோல்கட்டாவிற்கு அருகிலுள்ள டம் டம் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ தளவாடத் தொழிற்சாலை பிரசித்தி பெற்றது. மிகவும் துல்லியமான முறையில் ராணுவத்திற்கு தேவைப்படும் தளவாடங்களைத் தயாரிப்பதில் இந்த ஆலை பெயர் பெற்று விளங்குகிறது. இந்த ஆலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 151 டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகளும் காலியிடங்களும்: இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் கார்பென்டரில் 1, எலக்ட்ரீசியனில் 6, எலக்ரோபிளேடரில் 6, இன்ஜினியரிங் எக்சாமினரில் 4, பிட்டரில் 32, கிரைண்டரில் 9, மெஷினிஸ்டில் 27, மேசனில் 2, மில்லரில் 7, மில்ரைட்டில் 19, பெயிண்டரில் 2, எஸ்.எம்.டபிள்யூ.,வில் 10, டர்னர் மற்றும் வெல்டரில் தலா 10ம் சேர்த்து மொத்தம் 151 காலியிடங்கள் உள்ளன. விரிவான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு டெஸ்ட் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். டிரேடு டெஸ்ட் என்பது தகுதி அறிய மட்டுமே நடத்தப்படும். தேர்ச்சி முழுக்க முழுக்க எழுத்துத் தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : ஒவ்வொரு பதவிக்கும் ரூ.100/- ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் Power Jyoti Account No.34676949264ல் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.06.2015

இணையதள முகவரி: <http://i-register.org/ofdoreg/documents/ofdcAdvt.pdf>

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us