PUBLISHED ON : ஜூலை 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜேர்னிமேன் பிரிவில் பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 5, எலக்ட்ரானிக் மெக்கானிக் 5, டீசல் மெக்கானிக் 5,மெஷினிஸ்ட் 4, டிரைவர் மெட்டீரியல் 3, மெஷின் ஆப்பரேட்டர் 4, ரிஜ்ஜர் 4, கிரேன் ஆப்பரேட்டர் 2 என மொத்தம் 52 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: 18-26 (1.7.2025ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 24 ஆயிரம்
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 472. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 4.8.2025
விவரங்களுக்கு: grse.in