தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் பணியிடங்கள்

ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் பணியிடங்கள்

ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் பணியிடங்கள்


PUBLISHED ON : ஜன 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

படைபலம், படைத்திறன், நவீனமய இயந்திரங்கள் ஆகியவற்றிற்கு பெயர் போன இந்திய ராணுவம் சர்வ தேச அரங்கில் தனிப்பெரும் புகழ் பெற்றுத் திகழ்கிறது. இந்தியாவின் பாதுகாப்பை நிர்ணயிக்கும் மிக முக்கிய படைகளில் இந்திய ராணுவமும் ஒன்று. இத்தகைய பெருமை பெற்ற இந்திய ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் குறுகிய கால நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: பல்வேறு பிரிவுகளைக் கொண்ட இந்த இடங்களில் ஆண்களுக்கு மொத்தம் 100ம், பெண்களுக்கு மொத்தம் 19ம் உள்ளன. சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஏரோனாடிக்ஸ், ஏவியேஷன், மெட்டலர்ஜி, எக்ஸ்ப்ளோசிவ்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்யூனிகேஷன், புட் டெக்னாலஜி, ஐ.டி., என்ற இன்ஜினியரிங் பிரிவுகளில் இந்த இடங்கள் உள்ளன. தற்போது இந்தப் படிப்புகளில் இறுதியாண்டை மேற்கொள்பவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

வயது: 20 முதல் 27 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 02.10.1987 முதல் 01.10.1994க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: தேர்ந்தெடுக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

இதர தகுதி: ஆண்கள் உயரம் குறைந்த பட்ச உயரம் 157.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் உயரம் குறைந்தபட்சம் 152 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல் மற்றும் குரூப் டெஸ்ட்

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.03.2014

இணையதள முகவரி: www.joinindianarmy.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us