PUBLISHED ON : ஜன 02, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: உதவி இயக்குனர் 8, ஆராய்ச்சி உதவியாளர் 14, லோயர் டிவிஷன் கிளார்க் 13 என மொத்தம் 35 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிளார்க் பணிக்கு பிளஸ் 2, நிமிடத்துக்கு 30 வார்த்தை தட்டச்சு திறன் பெற்றிருப்பது அவசியம். மற்ற பணிகளுக்கு சமூக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 5.2.2024 அடிப்படையில் 40, மற்ற பணிகளுக்கு 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 750
கடைசிநாள்: 5.2.2024
விபரங்களுக்கு: icssr.org