/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
டிப்ளமோ முடித்தவருக்கு இரும்பு ஆலையில் பணி
/
டிப்ளமோ முடித்தவருக்கு இரும்பு ஆலையில் பணி
PUBLISHED ON : ஜன 09, 2024

மேற்கு வங்கத்தில் உள்ள இரும்பு ஆலை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் 3, அட்டென்டன்ட்கம் டெக்னீசியன் பிரிவில் பாய்லர் அட்டென்டன்ட் 3, எலக்ட்ரீசியன் 12, பிட்டர் 6, டர்னர் 3, வெல்டர் 5, கிரேன் ஆப்பரேட்டர் 9, கனரக வாகன டிரைவர் 5 என மொத்தம் 46 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஆப்பரேட்டர் பணிக்கு டிப்ளமோ, அட்டென்டன்ட் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 18.1.2024 அடிப்படையில் ஆப்பரேட்டர் 30, மற்ற பணிகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ஆப்பரேட்டர் பணிக்கு ரூ. 500 (எஸ்.சி., / எஸ்டி., 150), மற்ற பணிக்கு ரூ 300 (எஸ்.சி., / எஸ்.டி., ரூ. 100)
கடைசிநாள்: 18.1.2024
விபரங்களுக்கு: sail.co.in