
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
துணை இயக்குனர் 50, சயின்டிஸ்ட் 12, ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (நியூரோ சர்ஜரி, காசநோய், யூரோலாஜி, ஆர்த்தோபெடிக்ஸ்) 54, நிர்வாக அதிகாரி 2, இன்ஜினியர் 1 உட்பட மொத்தம் 120 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: துணை இயக்குனர் பணிக்கு பி.இ., / பி.டெக்., ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு எம்.பி.பி.எஸ்., மற்ற பணிகளுக்கு எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வயது: பிரிவு வாரியாக 40, 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 29.2.2024
விவரங்களுக்கு: upsconline.nic.in