/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
டிகிரி முடித்தவருக்கு கப்பல் கட்டும் தளத்தில் பணி
/
டிகிரி முடித்தவருக்கு கப்பல் கட்டும் தளத்தில் பணி
PUBLISHED ON : மார் 05, 2024

கோவா கப்பல் கட்டும் தளத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் சூப்பரன்டென்டன்ட் 4, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 31 (எலக்ட்ரிக்கல் 4, மெக்கானிக்கல் 4, இன்ஸ்ட்ருமென்டேசன் 1, சிவில் 1, ஐ.டி., 1, கப்பல் கட்டுமானம் 20), ஆபிஸ் அசிஸ்டென்ட் 38, பெயின்டர் 20, டிரைவர் 5, ரெக்கார்டு கீப்பர் 3, சமையல் 2 உட்பட 106 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ, பெயின்டர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மற்ற பணிக்கு பதவி வாரியாக மாறுபடும்.
வயது: ஆபிஸ் அசிஸ்டென்ட் 36, டெக்னிக்கல் அசிஸ்டென்ட், பெயின்டர் உட்பட பெரும்பாலான பிரிவுக்கு 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 27.3.2024
விவரங்களுக்கு: goashipyard.in