/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தேசிய கட்டுமான நிறுவனத்தில் வேலை
/
தேசிய கட்டுமான நிறுவனத்தில் வேலை
PUBLISHED ON : மார் 05, 2024

தேசிய கட்டட கட்டுமான நிறுவனத்தில் (என்.பி.சி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சீனியர் புராஜக்ட் எக்சிகியூட்டிவ்(சிவில், எலக்ட்ரிக்கல்) 30, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 40, மேனேஜ்மென்ட் டிரைய்னி 4, ஜெனரல் மேனேஜர் 3, கூடுதல் ஜெனரல்மேனேஜர் 2, மேனேஜர் 2, புராஜக்ட் மேனேஜர் 3, துணை ஜெனரல் மேனேஜர் 6 உட்பட மொத்தம் 93 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / டிப்ளமோ / பி.எல்., என பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: 27.3.2024 அடிப்படையில் பதவியை பொறுத்து 28, 30, 33, 37, 45, 49 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 27.3.2024
விபரங்களுக்கு: nbccindia.in