PUBLISHED ON : ஏப் 02, 2024

அ நிறம் | அளவு
சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தில் (CVRDE) 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர் 15, மெஷினிஸ்ட் 10, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 8, எலக்ட்ரீசியன் 6, டர்னர் 5, எலக்ட்ரானிக்ஸ் 4, மெக்கானிக்கல் 4, வெல்டர் 3, மோட்டார் வெகிக்கிள் 3, கார்பென்டர் 2 என மொத்தம் 60 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: 2021 / 2022 / 2023ல் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது: 18.4.2024 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 18.4.2024
விவரங்களுக்கு: drdo.gov.in/drdo
