/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அரசு கல்லுாரிகளில் 4000 பேராசிரியர் பணியிடங்கள்
/
அரசு கல்லுாரிகளில் 4000 பேராசிரியர் பணியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 09, 2024

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரி, பி.எட்., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.
ஆங்கிலம் 656, தமிழ் 569, கணிதம் 318, வணிகவியல் 296; வேதியியல் 263, கணினி அறிவியல் 244, இயற்பியல் 226, பொருளாதாரம் 161, விலங்கியல் 132, வரலாறு 126, தாவரவியல் 115, புள்ளியியல் 80, புவியியல் 78, கணினி பயன்பாடு 76, கல்வியியல் 45, அரசியல் அறிவியல் 37, மனை அறிவியல் 36, நுண் உயிரியல் 32, பெரு நிறுவன செயலர் 30 உட்பட 65 பாடங்களில் 4000 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். நெட் (NET), செட் (SET) தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
வயது சலுகை: 1.7.2024 அடிப்படையில் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு தேதி: 4.8.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300
கடைசிநாள்: 29.4.2024 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: trb.tn.gov.in