
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் (ஏ.ஐ.ஏ.எஸ்.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஏர்போர்ட் டெக்னீசியன் பி1 பிரிவில் 25, ஏர்போர்ட் டெக்னீசியன் பி2 பிரிவில் 15 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் / ஏரோநாட்டிக்கல் / மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.4.2024 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி ஸ்கிரீனிங், டெக்னிக்கல் அசஸ்மென்ட், வாக்-இன் இன்டர்வியூ
தேதி: வாக் - இன் இன்டர்வியூ சென்னையில் ஏப். 25ல் நடைபெறும். தவிர பெங்களூருவில் ஏப். 29, ஐதராபாத் மே 2ல் நடைபெறும்.
இடம்: DGM (Engg) Office, AIESL, New Integrated Service Complex, Meenambakkam, Chennai - 600 016
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் 'வாக் - இன்' இன்டர்வியூவில் பங்கேற்க வேண்டும்.
செயல்பாட்டு கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
விவரங்களுக்கு: aiesl.in