/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மின்சார நிறுவனத்தில் அதிகாரியாக விருப்பமா
/
மின்சார நிறுவனத்தில் அதிகாரியாக விருப்பமா
PUBLISHED ON : மே 07, 2024

மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கம்பெனி செக்ரட்ரி புரபஷனல் பிரிவில் 12 இடங்கள் உள்ளன.
பணிக்காலம்: ஐந்தாண்டு
கல்வித்தகுதி: ஐ.சி.எஸ்.ஐ., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது: 11.5.2024 அடிப்படையில் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 11.5.2024
விவரங்களுக்கு: powergrid.in