தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வாகன தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

வாகன தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

வாகன தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு


PUBLISHED ON : ஜூன் 11, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.டி.ஐ., (அனுபவம்) பிரிவில்பிட்டர் 45, மெஷினிஸ்ட் 43, பெயின்டர் 5, வெல்டர் 20, ஐ.டி.ஐ., அல்லாத பிரிவில் பிட்டர் 32, மெஷினிஸ்ட் 36, வெல்டர் 24, எலக்ட்ரீசியன் 38, எலக்ட்ரானிக் மெக்கானிக் 10 என மொத்தம் 253 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., அல்லாத பிரிவுக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 22.6.2024 அடிப்படையில் 15 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

முகவரி: The chief general manager, Heavy vehicles factory, Avadi, Chennai - 600 054.

கடைசிநாள்: 22.6.2024 மாலை 4:45 மணி.

விவரங்களுக்கு: avnl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us