PUBLISHED ON : ஜூன் 18, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பையில் உள்ள மஜாகான் கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர், எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், கார்பென்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 518 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.10.2024 அடிப்படையில் 15 - 19, 16 - 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 2.7.2024
விவரங்களுக்கு: mazagondock.in