தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/விவசாய மலர்/ மணக்க வைக்கும் ரோஸ்மேரி இலைகள்

 மணக்க வைக்கும் ரோஸ்மேரி இலைகள்

 மணக்க வைக்கும் ரோஸ்மேரி இலைகள்


PUBLISHED ON : ஏப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரோஸ்மேரி வேர் நாற்றுகளை ஜூன், ஜூலை மற்றும் செப்., அக்டோபரில் மானாவாரி பயிராக கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டருக்கு மேல் உள்ள மலைப் பிரதேசங்களில் நடவு செய்யலாம். ஒருமுறை நடவு செய்தால் 12 ஆண்டுகள் வரை பலன் தரும் என்பதால் வணிகப்பயிராகவும் சாகுபடி செய்யலாம்.

நிலத்தை இரண்டு முறை உழ வேண்டும். 2வது உழவின் போது எக்டேருக்கு 50 டன் மட்கிய தொழுஉரம், ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை மண்ணுடன் கலக்க வேண்டும். 30 செ.மீ உயரம், 1.5 மீட்டர் அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து ஒரு ஏக்கருக்கு 20ஆயிரம் நாற்றுகள் நடலாம். நாற்று நடும்போது ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம், 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை மண்ணில் இட வேண்டும்.

ரோஸ்மேரி செடிகள் பூப்பதற்கு முன் 10 முதல் 15 செ.மீ நீளம் கொண்ட தண்டுகளை வெட்டியெடுத்து நுனி இலைகளைத் தவிர மற்ற இலைகளை அகற்ற வேண்டும். அவற்றை உயிர் உரத்தால் நாற்றுநேர்த்தி செய்த பின் சிறு பாலித்தீன் பைகளில் நடவு செய்து நிழலான பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும். இரு மாதங்களில் நாற்றுகள் வேர்விட்டு நடவுக்கு தயாராகிவிடும்.

இவற்றை வரிசைக்கு வரிசை 45 செ.மீ, செடிக்குச் செடி 45 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். இது வறட்சியை தாங்கும் என்றாலும் வறண்ட நேரத்தில் நீர் பாய்ச்சினால் பச்சை இலை மகசூல் அதிகமாக கிடைக்கும்.

நட்டு ஒரு மாதம் கழித்து மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 4 அல்லது 5 முறை களை எடுக்க வேண்டும்.

நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் உயிர் உரங்களை ஏக்கருக்கு 2 கிலோ எடுத்து தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை பஞ்சகாவ்யா 3 சதவீத கரைசலை தெளித்தால் மகசூல் அதிகரிக்கும். பஞ்சகாவ்யா 3 சத கரைசலை இலைவழி தெளிப்பு வருடத்திற்கு 5 முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். தசகாவ்யா 3 சத கரைசலை வருடத்திற்கு 3 முறை தெளிக்க வேண்டும். மண்புழு மட்கு வடிநீர் 10 சத கரைசல் வருடத்திற்கு 3 முறை இலைவழி தெளிப்பு மூலம் ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

ரோஸ்மேரி செடி பூக்கும் சமயத்தில் 30 முதல் 35 செ.மீ நீளம் கொண்ட பூக்கும் தருணத்தில் உள்ள இலையுடன் கூடிய மேல் தண்டுகளை அறுவடை செய்ய வேண்டும். தண்டுப்பகுதியில் இருந்து ரோஸ்மேரி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நாற்றுகள் நட்ட 215 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பின் நான்கு மாத கால இடைவெளியில் ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us