தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/ பண்ணை குட்டையும் மீன்வளர்ப்பும்

 பண்ணை குட்டையும் மீன்வளர்ப்பும்

 பண்ணை குட்டையும் மீன்வளர்ப்பும்


PUBLISHED ON : ஏப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவசாய நிலங்களில் மழைநீரைச் சேமிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பாசனத் தேவைக்கும் அமைக்கப்படும் சிறிய நீர்நிலை அமைப்பே பண்ணை குட்டை.

இது அதிகப்படியான மழைநீரைச் சேமித்து வறட்சி காலங்களில் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சவும் மீன் வளர்ப்பு, கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது.

பண்ணைக் குளம் அல்லது பண்ணை குட்டை தோண்டுவதற்கு இயற்கையாகவே தாழ்வான, களிமண் நிறைந்த நீர் வழிப்பாதை அல்லது மழைநீர் தேங்கும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தின் பரப்பளவு, நீரின் தேவைக்கேற்ப சரியான சரிவு, ஆழம், வடிவத்தில் நான்கு பக்கமும் சரிவான பாதை இருக்குமாறு குட்டை தோண்ட வேண்டும்.

அகற்றப்படும் மண்ணைக் கொண்டு குளத்தைச் சுற்றி மண் வரப்பு அமைக்கலாம். அந்த வரப்பில் புற்கள் அல்லது மரங்கள் நட்டு ஸ்திரத்தன்மையை பராமரிக்கலாம்.

உட்பகுதி நீர்க்கசிவைத் தடுக்க பாலித்தீன் உறை அல்லது சுட்டச்செங்கல், கற்களால் பூச வேண்டும். அல்லது யு.வி. தடுப்புத்திறன் கொண்ட 300 முதல் 500 மைக்ரான் தடிமன் கொண்ட தார்ப்பாய் சிறந்தது. தார்ப்பாய் அமைப்பதற்கு முன் குட்டையின் அடியில் கூர்மையான கற்கள் இல்லாதவாறு சுத்தம் செய்து மணல் அல்லது தென்னைநார் பரப்ப வேண்டும். தார்ப்பாயை சமமாக விரித்து ஓரங்களை மண்ணால் மூடவேண்டும். கால்நடை தண்ணீர் குடிப்பதற்கும், குட்டையை பராமரிப்பதற்கும் பாதுகாப்பான, ஆழமற்ற நுழைவுப்பாதை அமைக்க வேண்டும்.

பண்ணை குட்டை அளவு பொதுவாக ஒரு ஏக்கருக்கு 20 மீட்டருக்கு 20 மீட்டர் என்கிற நீள, அகலத்தில் 3 மீட்டர் ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்கலாம். நிலம் சிறிதாக இருந்தால் 15க்கு 15க்கு 3 மீட்டர் அல்லது 10க்கு 10க்கு 3 மீட்டர் அளவில் அமைக்கலாம். 45 அடி நீளம், 45 அடி அகலம், 9 அடி உயரமுள்ள பண்ணை குட்டையில் 5 லட்சத்து 16 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேமிக்கலாம். 21 அடி நீளம், 21 அடி அகலம் ஆறடி ஆழமுள்ள பண்ணை குட்டையின் கொள்ளளவு 74 ஆயிரத்து 926 லிட்டர் தண்ணீர்.

அதாவது ஒரு கனஅடிக்கு 28.31 லிட்டர் தண்ணீரை நிரப்ப முடியும். நிலத்தின் அளவு, தண்ணீரின் தேவைக்கேற்ப குட்டையின் கொள்ளளவை முடிவு செய்யலாம். களிமண் நிலம் நீர்க்கசிவைத் தடுக்கும். மணல்பாங்கான நிலத்தில் பாலித்தீன் ஷீட் விரிக்க வேண்டும்.

மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் நீர் உள்ளே, வெளியே செல்லும் வழி, பாதுகாப்பு வேலி அவசியம் இட வேண்டும். இதன் மூலம் ஆண்டின் 80 சதவீத காலத்திற்கான நீரைத் தக்கவைக்க முடியும் என்பதால் மீன் வளர்ப்பிற்கும் இதை பயன்படுத்தலாம்.

குட்டையும் மீன்களும் ஒரு பண்ணை குட்டைக்கு 1000 முதல் 2000 எண்ணிக்கையில் 5 முதல் 7 செ.மீ., அளவில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யலாம். குறைந்த முதலீட்டில் ஆண்டுக்கு ரூ.1.75 லட்சம் வரை வருமானம் தரும் கூட்டு விவசாய முறை இது. ஒரே குட்டையில் கட்லா, ரோகு, மிர்கால்னா புல்கெண்டை போன்ற வேகமாக வளரும் மீன் இனங்கள் மூலம் 6 முதல் 8 மாதங்களில் நல்ல லாபம் ஈட்டலாம்.

அரிசித் தவிடு, கடலை புண்ணாக்கு அல்லது கடைகளில் கிடைக்கும் மீன் உணவுத்துகள்களை காலை, மாலை உணவாக இட வேண்டும். மீன் வளர்ப்பு மற்றும் வாத்து வளர்ப்புக்கும் பண்ணை குட்டை ஏற்றது.

தமிழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை மூலம் பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பிற்கு மீன் வளர்ப்பு துறை மூலம் பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us